|
திருவாரூர் மாவட்டம் [Tiruvarur District], சுமார் 2,097.09 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் திருவாரூர் ஆகும். இம்மாவட்டத்தின் கிழக்கில் நாகப்பட்டினம் மாவட்டமும் [Nagapattinam District] மேற்க்கில் தஞ்சாவூர் மாவட்டமும் [Thanjavur District] தெற்க்கில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையும் உள்ளது.
திருவாரூர் மாவட்டம் [Tiruvarur District], 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு 1991-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் [Tiruvarur District] மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் உருவானது. 1997--ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து
* வலங்கைமான் தாலூக்காவும் - Valangaiman Taluk
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து
* கொடவாசல் தாலூக்கா - Kodavasal Taluk * திருவாரூர் தாலூக்கா - Tiruvarur Taluk * திருத்துறைப்பூண்டி தாலூக்கா - Thiruthuraipoondi Taluk * நன்னிலம் தாலூக்கா - Nannilam Taluk * நீடாமங்கலம் தாலூக்கா - Needamangalam Taluk * மன்னார்குடி தாலூக்கா - Mannargudi Taluk
திருவாரூர் மாவட்டம் [Tiruvarur District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 11,69,474 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 76.6% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 12,68,094 பேர் உள்ளதாகவும், இதில் 6,27,616 ஆண்களும் 6,40,478 பெண்கள் உள்ளனர். இங்கு 83.3% பேர் படித்தவர்கள்.
திருவாரூர் மாவட்டம் [Tiruvarur District], 7 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.
* Kodavasal - கொடவாசல் * Mannargudi - மன்னார்குடி * Nannilam - நன்னிலம் * Needamangalam - நீடாமங்கலம் * Thiruthuraipoondi - திருத்துறைப்பூண்டி * Tiruvarur - திருவாரூர் * Valangaiman - வலங்கைமான்
|